முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை அபிராமபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைலாபுரம் தோட்டமே பாமக தலைமையிடம் என தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக உடல்நலம் விசாரித்ததாகவும், உங்களோடு நாங்களும் இருக்கிறோம் என ஸ்டாலினிடம் சொல்லவில்லை என்றும் கூறினார்.
ஆகஸ்ட் 17-ல் நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழுவுக்கு உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும், யார் யார் அந்த உரியவர்கள் என்பதை கட்சி தீர்மானிக்கும் என தெரிவித்தார்.