பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகாரில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளில் 90 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய இந்த பட்டியலை 38 மாவட்ட ஆட்சியர்களும், அனைத்து அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் பட்டியலில் விடுபட்டவர்கள் செப்டம்பர் 1-ம் தேதி வரை பெயர்களை சேர்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், நாள்தோறும் கூறப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அச்சுறுத்தல்களையும் தேர்தல் ஆணையம் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.