ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த தொர்கிலு கார்த்திக் மற்றும் ரோகித் ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில், மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ராஜபாளையத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.