இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி முன்னேறியது.
தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் – ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.