சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செங்குட்டுவன், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம், செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்து விட்டதால், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல் உட்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, 2023-ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.