குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நர்மதா மாவட்டத்தில் கனமழை காரணமாக நர்மதா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நர்மதா ஆற்றில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டம் 133 அடியைத் தாண்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 15 மதகுகள் வழியாக மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.