இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்க அரசு, அந்நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் பிற நாடுகளுக்கும் அபராதம் உள்ளிட்ட நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியை விதித்த அதிபர் டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இனி இந்தியா வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இது ஒரு நல்ல நடவடிக்கை எனத் தெரிவதாகவும் அதிபர் டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.எரிசக்தி கொள்முதலில் தேசிய நலனே முக்கியமென மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையிலும் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.