தமிழகத்தில் வெறும் 75 ஆயிரம் ஹெக்டரில்தான் இயற்கை விவசாயம் நடைபெறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தரமணியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்தில் நடைபெற்ற இளைஞர்களும் விவசாயமும் மாநாட்டில் பேசியவர்,
இந்தியா முழுவதும் 59 லட்சம் ஹெக்டரில் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது என்றும் தமிழகத்தில் வெறும் 75 ஆயிரம் ஹெக்டரில்தான் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள், இளைஞர்கள் விவசாய பயிற்சித் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றும் உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் என்றும் ஐஐடிக்குள் வந்தாலும் விவசாயத்தை வைத்து அறிவியலையும் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.