மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த அதிகாரிகள், பிரதமர் மோடி பெயரை கூறுமாறு சித்ரவதை செய்ததாக, பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பலரின் பெயர்களை சேர்க்குமாறு தன்னை சித்ரவதை செய்ததாக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் பெயர்களைக் கூறுமாறு
கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இந்த பெயர்களை கூறிவிட்டால் சித்ரவதை செய்ய மாட்டோம் என காவல் அதிகாரிகள் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் விசாரணையின்போது தன்னுடைய நுரையீரல் சவ்வு கிழிந்து மயக்கமடைந்ததாகவும், பின்னர் மருத்துவமனையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் பல உண்மை வெளியே வரும் எனவும் பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.