திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு ஆற்றங்கரை அருகே வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்று வந்தனர். இந்நிலையில் சந்தையை நகராட்சிக்கு சொந்தமான விற்பனை கூடத்திற்கு மாற்ற அரசு அதிகாரிகள் முடிவெடுத்து நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.