சென்னை திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்இ மண்டல அலுவலர் சடலமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த மகேஷ் என்பவர், திருமங்கலத்தில் சிபிஎஸ்இ மண்டல அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனையடுத்து சக பணியாளர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் அவர் சடலமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.