அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் பரப்புரையை முடித்துவிட்டு நெல்லை சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதில், 109 வகை சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்த விருந்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,