பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்,
இதுதொடர்பாக தமிம் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், புத்தகம் புதிய உலக ஒழுங்கு வடிவம் பெற வழிவகுக்கிறது என்றும், புதிய உலகில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்க தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்ய வேண்டிய 10 விஷயங்களைப் பற்றி எனது புத்தகத்தில் தெரிவித்துள்ளதாகவும், புதிய உலகில் இந்தியா முக்கியமான சக்தியாக உயர புதிய யோசனைகள், புதிய திட்டங்கள், புதிய உத்திகளைக் கொண்டிருக்க வேண்டும் எனறும் அவர் கூறினார்.