மாமல்லபுரத்தில் 4-ஆவது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
இதில் 19 நாடுகளைச் சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு நேற்று மணல் விழா நடைபெற்றது.
அப்போது வீரர்கள் தங்கள் நாடுகளில் இருந்து கொண்டு வந்த மணலை, மேடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தொட்டியில் கொட்டினர்.