நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வடமாநிலத்தவர்கள் தங்களை தாக்கியதாகத் தெரிவித்த பொதுமக்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர்.
செங்கோடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆலை ஒன்றில் வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது அங்குள்ள குழந்தை மீது பந்து பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் வட மாநிலத்தவர்களிடம் அறிவுரை வழங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியதால் ஒன்று திரண்ட கிராம மக்கள் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த ஆலையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.