குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் நம்மை வேறு எதுவும் ஒன்றும் செய்யாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் சின்மயா மிஷன் சார்பில் குரு ஆராதனா தினவிழா நடைபெற்றது. இதில், பகவத்கீதையின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடலுக்கு AI மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன.
பாடலில் 125 வரிகளுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நிகழ்ச்சியில் சின்மயா மிஷனின் சென்னை தலைவர் சுவாமி மித்ரா நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா, நமது சிந்தனைகள் ஒரேமாதிரியாக இருப்பதற்கு குருவின் அனுக்கிரகம் வேண்டும் எனவும் அது இருந்தால் வேறு எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.