பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!
Oct 18, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 09:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் யார்? தற்போது அவர் குறித்து பலரும் பேசி வருவது ஏன்? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூலை 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு, அந்நாட்டுப் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்த அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய  ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

பிரதமரின் இந்த பயணமும், அவர் மேற்கொண்ட ஒப்பந்தங்களும் எந்த அளவுக்குக் கவனம் பெற்றதோ, அதே அளவுக்குக் கவனத்தை மோடிக்குப் பாதுகாப்பு வழங்கிய பெண் அதிகாரியும் பெற்றுள்ளார்.

பிரதமருக்கு SPG எனப்படும் சிறப்புக் குழு பாதுகாப்பு அளித்து வருகிறது.  உள்நாடு, வெளிநாடு எனப் பிரதமர் எங்குச் சென்றாலும் இந்த குழுவினரும் உடன்செல்வார்கள். பிரதமர் செல்லும் இடங்களைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் SPG அதிகாரிகள் பிரதான வேலை. சுருக்கமாகச் சொல்வதென்றால், பிரதமர் மீது சிறு துரும்பு கூடப் படாமல் பார்த்துக்கொள்பவர்கள் இவர்கள்தான்.

இத்தகைய எஸ்.பி.ஜி. பிரிவில் சேர்வது எளிதான காரியமல்ல. காவல்துறையில் சேரவே கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றால், எஸ்.பி.ஜி. பிரிவில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரிக்கத் தேவையில்லை. உடல் சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி, நெருக்கடியான சூழலில் எவ்வாறு செயல்படுவது, ஆபத்துகளை முன்னரே எப்படிக் கணிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் எஸ்.பி.ஜி. அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இந்த குழுவைச் சேர்ந்த ஆண் அதிகாரிகள் மட்டுமே இதுவரை பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். ஆனால், இங்கிலாந்து பயணத்தின்போது முதன்முறையாகப் பெண் அதிகாரி ஒருவர் பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

அந்த பெண் அதிகாரியின் பெயர் அடாசோ கபேசா. அவரது பூர்வீகம் மணிப்பூர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் SSB எனப்படும், சஷாஸ்திர சீமா பால் அமைப்பில் இணைந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார்.

தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 55வது பட்டாலியனில் அவர் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்ற இவர், பிரதமருக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தார்.

தேசத்தின் உயரிய தலைவர்களில் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணி, பெண் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு அடாசோ கபேசா முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடாசோ கபேசாவால் கவரப்பட்ட பல பெண்கள், பாதுகாப்புப் பணிகளில் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: The female officer who provided security to the Prime Minister: A new chapter in history beginsஎஸ்.பி.ஜிSPGபிரதமர் மோடி
Share
Tweet
SendShare
Previous Post

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Next Post

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies