கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க...! : சுருங்கும் IT வேலைகள் - எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!
Oct 18, 2026, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 09:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாடுகளுக்கு உயர்கல்வி கற்கக் கடன்வாங்கிச் செல்லும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கல்வி பயில பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பதை  விரும்புகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா அவர்களது கனவு தேசமாக இருந்து வருகிறது.

ஆனால், தற்போதைய சூழலில் அமெரிக்கா சென்று கல்வி பயில்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து இதுவரை யாரும் பேசியதில்லை. இந்நிலையில், அது குறித்து உரையாடலை ஜோஹோ நிறுவனத்தின் இணை  நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற, இந்திய மாணவர் ஒருவர் 70 லட்சம் கடன் வாங்கிய செய்தி அண்மையில் வெளியானது. அந்த கடனுக்கான வட்டி 12 சதவீதம். இந்த செய்தியைச் சுட்டிக்காட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, வெளிநாட்டுப் படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

வெளிநாட்டில் பட்டப்படிப்புகளைத் தொடர அதிக கடன் வாங்குவது குறித்து மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடு என்றல்ல, இந்தியாவில் படிப்பைத் தொடரவும் அதிக கடன் வாங்குவது புத்திசாலித்தனம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கல்வியின் பெயரில் இளைஞர்களைக் கடனில் சிக்க வைக்கக்கூடாது என்பதில் தான் உறுதியாக உள்ளதாகக் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறைகளில் தற்போது  வேலைவாய்ப்பு மிகவும் மோசமாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு நோக்கி அனைத்து நிறுவனங்களும் பயணித்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனை ஸ்ரீதர் வேம்புவும் சுட்டிக்காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு காரணமாக, பல நிறுவனங்களில் புதிய ஊழியர்களை பணியமர்த்தும் சூழல் தற்போது இல்லை எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

எனவே, வழக்கமான பட்ட படிப்புகளுக்கு மாற்றாக, தொழில் சார்ந்து  புதிய பயிற்சிகளை அளிக்கும் மையங்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அந்த பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்கள் பெறும் அறிவை, தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்விமுறை குறித்த ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கள், கல்வியாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இதுவரை இருந்து வந்த கல்விமுறைக்கு மாற்றாக,  மாற்றுக் கல்வி வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் அவரது கருத்துகள் வழிவகுத்துள்ளது.

Tags: Don't take out a loan to study abroad...! : Shrinking IT jobs - Sridhar Vembu warnsஎச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்புகடன்
Share
Tweet
SendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies