ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உடலுக்குக் குடியரசுத் தலைவர் திரவபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்த ஷிபு சோரன் உடல், அவர் சிகிச்சை பெற்று வந்த டெல்லியில் உள்ள ஸ்ரீகங்காராம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி, ஷிபு சோரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவரது மகன் ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதேபோல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.