பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக பூத் கமிட்டி மாநாடு வரும் 17ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தமிழகத்தில் நடைபெறும் அவலங்களை கண்டு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் என்றும் பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின் ஒரு பகுதியாக பூத் கமிட்டி மாநாடு வரும் 17ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என்று அவர் கூறினார்.
தூத்துக்குடி வருகை தந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சி மிகுந்த வரவேற்பை அளித்தனர் என்றும் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை நேசிக்கக்கூடியவர் பிரதமர் மோடி என்றும் மத்திய அரசின் கருத்துக்கு ஒத்துப்போனால் தான், மாநில அரசு வளமான அரசாக மாறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.