இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ராகுல் காந்தி எப்போதும் பேசி வருவதாக, பாஜக எம்.பி கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகையும், இமாச்சலப்பிரதேசத்தின் மாண்டி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் ராகுல் காந்திக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ராகுல் காந்தி எதிரி நாடுகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார் எனத் தெரிவித்தார். ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளார் எனக் குற்றம் சாட்டிய கங்கனா ரணாவத், அவர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
வரும் காலங்களில், இந்தியாவின் மரியாதை, ஒருமைப்பாடு மற்றும் மன உறுதியைப் பாதிக்காத வகையில் மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கங்கனா கேட்டுக் கொண்டுள்ளார்.