உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறுவது தொடர்பான வழக்கில் திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மக்களைச் சந்தித்து வரும் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கைக்காக ஓடிபி பெறுவது விதி மீறல் எனக் கூறிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அந்த செயல்முறைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து தடை உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வழக்கில் தாங்கள் வாதிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என திமுக வழக்கறிஞர் வில்சனை எச்சரித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.