ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டவர், இளைஞர்களையும், மாணவர்களையும் சாதி ரீதியாக அணி திரட்டுவதே ஆணவக் கொலைக்குக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
தலைவர்களைச் சாதி ரீதியாகக் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது என்றும் ஆணவக் கொலை தடுப்பு சட்டம் இயற்றத் தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.
ஆணவக் கொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், தமிழகத்தில் பொதுமக்களிடம் காவல் துறையினர் அத்துமீறி வருகின்றனர் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
காவல் துறையை மறு பரிசீலனை செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் காவல் துறையினர் அடியாட்கள் போல் செயல்படுவதைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.