ஷார்ஜாவில் இந்தியக் கலாச்சாரம் அவமதிக்கப்படுவதாகப் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க நாணயங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
பின்னர் வெளிவந்து பேசிய அவர், தான் ஷார்ஜாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் , அங்கு இந்தியக் கலாச்சாரம் அவமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ஷார்ஜா அதிகாரிகள் தனது தாலியைக் கழற்றி வைக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் வேதனை தெரிவித்தார்.