அணு ஆயுதங்கள் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவை நோக்கி 2 அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக பேட்டியளித்த கிரம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் கடமையில் ஈடுபட்டுள்ளன எனவும், அது ஒரு வழக்கமான செயல்பாடுதான் எனவும் கூறினார்.
மேலும். அணு ஆயுதம் குறித்துப் பேசும்போது அனைவரும் கவனமாகப் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ்வின் பேச்சுக்கு ரஷ்ய அரசு கண்டனம் எதுவும் தெரிவித்ததா எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கிரம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும் எனக் கூறினார்.