உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சித்ரகூட் நகரில் பெய்து வரும் கனமழையால் யமுனை மற்றும் மந்தாகினி நதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே பிரயாக்ராஜ் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.