கர்நாடகாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணியாளர்கள் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்ததால் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனால் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, தர்வாத், கலபுர்கி, ஷிவமோகா உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டது. மேலும், தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டதால் கர்நாடக செல்லும் பயணிகளும் சிரமத்தைச் சந்தித்தனர்.