விருதுநகரில் மின் இணைப்பை இடம் மாற்றிக் கொடுக்க 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்த லலிதாம்பிகை என்பவர், தனது வீட்டின் பழைய மின் இணைப்பை இடம் மாற்றித் தரக்கோரி விருதுநகர் உதவிப் பொறியாளர் மாடக்குமாரிடம் மனு கொடுத்துள்ளார்.
மின் இணைப்பை மாற்ற அவர் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்தனுப்பிய ரசாயம் தடவிய பணத்தை மனுதாரரிடம் உதவிப்பொறியாளர் மாடக்குமார் பெற்ற போது அவர், கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.