ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்து, 90 நாட்களே ஆன நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாகப் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் பயங்கரவாத முகாம்கள், ஏவுதளங்கள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர புதிய பயங்கரவாத திட்டங்களை வகுக்க, பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் உயர் தளபதிகளுடன், ஐஎஸ்ஐ உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, ஐஎஸ்ஐ 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.