ஈரோடு அருகே தனக்குச் சொந்தமான நிலத்தின் முன் பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டை இரவோடு இரவாக இடித்து தரை மட்டமாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை திமுகவினர் எடுத்துச்சென்றதாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் பின்பக்கத்தில் உமா சங்கர் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதனை திமுகவைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு விற்பனை செய்ய உமா சங்கர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இதனையடுத்து, நிலத்தின் முன்பக்கத்தில் உள்ள ஓட்டு வீட்டினை காலி செய்யுமாறு ஜெகநாதனிடம் வினோத் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில், இரவோடு இரவாக வீட்டை இடித்துவிட்டு, பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திமுகவைச் சேர்ந்த உமாசங்கர், வினோத் ஆகியோர் எடுத்துச் சென்றதாக ஜெகநாதனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.