ஜார்க்கண்டில் உடல்நலக்குறைவால் காலமான சிபு ஷோரனின் உடலுக்கு அவரின் மகனும், அம்மாநில முதலமைச்சருமான ஹேமந்த் ஷோரன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான சிபு ஷோரன் கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இவரின் உடல் ராஞ்சியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது சிபு ஷோரனின் மகனும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் ஷோரன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.