1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமானது. கோயில்களும் குருத்வார்களும் நிறைந்திருந்த லாகூர் முழுவதுமாக முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டது. தேசப் பிரிவினையின் போது என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1947 ஆகஸ்ட் 5ம் தேதி, தேசப் பிரிவினையில் உடன்பாடு இல்லாத பஞ்சாப் கவர்னர் ஜென்கின்ஸ் , வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். கோடீஸ்வரர்களாக இருந்த இந்துக்களும் சீக்கியர்களும், முஸ்லீம்களால் அடித்து விரட்டப் பட்டு, அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ராவல்பிண்டி வழியாக லாகூருக்குச் சென்ற காந்தி, அகதிகள் முகாமுக்குச் சென்றார். 9000 பேர் இருந்த அந்த முகாமில் ஒரு பெண் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசப் பிரிவினையால் உயிர் தப்பினால் போதும் என்று ஓடிவந்த இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் அனைவரையும் பாகிஸ்தானின் முஸ்லீம் தேசிய படை, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது.
காந்தி இந்த முகாமுக்குச் சென்றது, அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது. அதே நாளில், லாகூரில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.
ஏராளமான ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் லாகூரில் இருந்தனர். பிரிவினை நெருங்க நெருங்க,லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில்,லாகூரில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிந்து மாகாணத்துக்கு வந்த ஸ்ரீ குருஜியை ஏராளமான ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
முன்னாள் பாரத துணைப்பிரதமர் எல்.கே.அத்வானியும் அதில் ஒருவர். பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கம் விண்ணைத் தொட்டு காற்றெங்கும் எதிரொலித்தது. இந்துக்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் வகையில் 10,000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்ட பதசஞ்சலன் என்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இன்னும் 10 நாளில் இஸ்லாமிய நாடாகப் போகும் பாகிஸ்தானில் இப்படி ஒரு பேரணி நடத்தியது மிகப் பெரிய ஒரு சாதனையே. குருஜியும், சிந்து மக்களின் குருவான மாகாண சாது வாஸ்வானியும் பங்கேற்ற பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
ஹிங்கலாஜ் தேவியால் புனிதமான இந்த பூமி,ராஜா தாஹிர் அரசாண்ட இந்த பூமி பாகிஸ்தானுக்குப் போவது வருத்தமளிப்பதாகக் கூறிய ஸ்ரீ குருஜி, முஸ்லீம் லீக் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் பாகிஸ்தானை அடைந்துள்ளது. காங்கிரஸ் முஸ்லீம்கள் முன் மண்டியிட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் இது நீண்டநாள் நீடிக்காது என்றும்,அதுவரை இந்துக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஸ்ரீகுருஜியின் வார்த்தைகள், அங்கிருந்த இந்துகளுக்கும் சீக்கியர்களுக்கும் புதிய தெம்பைக் கொடுத்தது.
ஏராளமான இந்துக்கள் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்தனர். தங்கள் முன்னும் நாட்டின் முன்னும் இருக்கும் சவால்களை எப்படிச் சமாளிப்பது என்று ஸ்ரீ குருஜியிடம் ஆலோசனை பெற்றனர். அதேநேரம், டெல்லியில், இந்தியாவின் பிரதமர் ஆனபின் வைசிராய் மாளிகையில் தங்கி கொள்ளலாமா? நாட்டின் ஆடிட்டர் ஜெனரலாக இருந்த சர் பிட்டி முன்ரோவே தொடரலாமா ? என மவுண்ட்பேட்டனுக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தார் நேரு.
டெல்லி அமைதியாக இருந்த நிலையில், பஞ்சாப், சிந்து,வங்காளம்,பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் இஸ்லாமிய வன்முறையின் கோரப் பிடியில் சிக்கி இருந்தன. கராச்சியில், இந்துகளின் எதிர்காலம் என்னவாகும் என்று ஸ்ரீ குருஜி சிந்தித்துக் கொண்டிருந்தார்.