இந்தியா வர்த்தகத்தை எந்த நாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
தனது வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது எனவும் ரஷ்யாவுடன் உறவை துண்டித்துக்கொள்ள அமெரிக்கா இந்தியாவை வற்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அழுத்தம் சட்டவிரோதமானது என்றும், எந்தவொரு நாடும் தங்களது வர்த்தகத்தை இந்த நாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க சொல்வதற்கு உரிமை இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.