இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்தவர் என்று சாதனை படைத்துள்ள அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை கையாளும் திறன் கொண்ட பதவி மத்திய உள்துறை அமைச்சர் பதவியாகும். நாடு சுதந்திரமடைந்ததும் சர்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் 119 நாட்கள் பொறுப்பு வகித்தார்.
இதனை தொடர்ந்து ராஜாஜி, லால் பகதூர் சாஸ்திரி, சரண் சிங், மொரார்ஜி தேசாய், அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உள்துறை அமைச்சராக பதவி வகித்தனர்.
இதில், அதிக நாட்கள் உள்துறை அமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமை தற்போதைய அமைச்சர் அமித்ஷாவுக்கு கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற அமித்ஷா, 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி 2 ஆயிரத்து 256 நாட்கள் பதவி வகித்த நிலையில், அமித்ஷா 2 ஆயிரத்து 258 நாட்கள் பதவி வகித்து அத்வானியின் சாதனையை முறியடித்துள்ளார்.