காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளித்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கந்தபுராணம் அரங்கேறிய கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில், ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி, வள்ளி, தெய்வானையுடன் முருகன் வெள்ளித் தேரில் எழுந்தருளினார்.
மங்கல வாத்தியம், செண்டை மேளம் முழங்கச் சுப்பிரமணிய சுவாமி, கோயிலை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது அரோகரா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.