உத்தராகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
உத்தரகாசியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதுவரை ஒரு சில உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரையும் பாதுகாப்பாக மீட்க முயற்சிப்பதாகவும், வானிலை சீரடைந்தவுடன் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வரும் மீட்புப் பணி மேலும் துரிதப்படுத்தப்படும் எனவும் கூறினார்.