திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பீரோவில் இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றபோது கயிற்றில் தலை மாட்டி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் நந்தனா தேவி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பள்ளிக்குச் செல்வதற்காகப் பீரோவில் இருந்த புத்தகத்தைச் சிறுமி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாகத் துணி காயப்போடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிறுமியின் தலை மாட்டியது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.