திருவள்ளூர் மாவட்டம், நத்தத்தில் லாரி மோதியதில் பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
நத்தத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர், அந்தப் பகுதியில் உள்ள கிரானைட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவர் வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியே கட்டுமான பணிகளுக்காகச் சவுடு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியதில் சாந்தி தலைநசுங்கி பலியானார்.
சம்பவ இடத்திலிருந்து லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.