உத்தராகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதன் ஆசிரமத்தின் ஆரத்தி நிகழ்வு நடைபெறும் இடத்தில், சிவனின் சிலையைத் தொட்டபடி கங்கை நதி பாய்ந்தோடுகிறது.
கனமழை காரணமாகக் கங்கை ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், சார்தாங் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.