பஞ்சாபில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மொஹாலியின் எஸ்ஏஎஸ் நகரில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் ஆலையின் கட்டடம் சேதமடைந்தது.
மேலும் அங்கு பணியாற்றிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 3 தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.