உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயர், புகைப்படம் இடம்பெற தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து அரசியல் சண்டைகள் என்பது தேர்தல் களத்தில் தான் இருக்க வேண்டுமே தவிர நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதலமைச்சர் பெயர், புகைப்படம் பயன்படுத்துவதற்குத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கைத் தாக்கல் செய்த அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.