திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி கேமரா பொருத்தியதால் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனியை அடுத்த பெருமாள் புதூர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் இளைஞர்கள் அடிக்கடி மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி தனது வீட்டின் முன்பு சிசிடிவி படக்கருவியைப் பொருத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதாதல் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்யும் நிர்மல் குமார் என்பவருக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிர்மல் குமார், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த மூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்துள்ளார். இதனைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பழனி தாலுகா போலீசார், தப்பியோடிய நிர்மல் குமாரை தேடி வருகின்றனர்.