ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த தரநிலையை இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் கோப்பைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 792 புள்ளிகள் பெற்று 3 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.