வங்கதேசத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சிட்டகாங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.