கும்பகோணம் அருகே டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சலில் தனது கணவர் விஷம் குடித்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவபுரம் கிராமத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கலியமூர்த்தி என்பவர் அனுமதி இன்றி வீடு மற்றும் கடை கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக குமரவேலு என்பவரின் சித்தப்பா நாராயணசாமி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மேலும், இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி மற்றும் காவல்துறையினர் பிரச்சனைக்குப் பேசி தீர்வு காணும் படி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குமரவேல், அலைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனைப் பார்த்து தொலைப்பேசியைப் பறித்த போலீசார், காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய அவர், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து குமரவேல், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சலில் விஷம் குடித்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.