அய்யா என்று தன்னை மரியாதையுடன் அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதாக வேதனை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தைலாபுரத்து இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்
அய்யா என்று அழைத்தவர்கள் தற்போது பெயர் சொல்லி அழைப்பதற்கு அன்புமணியே காரணம் என்றும் கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கவும், நீக்கவும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார்.
46 ஆண்டுக் காலம் கட்டி காப்பாற்றிய கட்சியை தன்னிடம் கொடுக்குமாறு அன்புமணி வற்புறுத்தினார் என்றும் நான் தான் வேட்பாளர், நான் தான் கூட்டணியை முடிவு செய்வேன் என அன்புமணி கூறியது தான் பிரச்சனை என்றும் தன் மீது உயிரை வைத்திருந்த சிலரை அன்புமணி பணத்தை வைத்து அவர் பக்கம் இழுத்துவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.
வடிவேல் ராவணனுக்கு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி அவர் பக்கம் இழுத்துக்கொண்டார் என்றும் தந்தையிடமே ஒட்டுக் கேட்பு கருவி வைத்துக் கண்காணிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியவர் மனக்குமுறலை ஊடகம் முன்பு கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறேன் என்று ராமதாஸ் கூறினார்.