சுதந்திரம் கிடைக்க இன்னும் ஆறு நாட்களே மிச்சமிருந்த நிலையில் ஹைதராபாத்தில் ரஜாக்கர்களின் வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. தேசப் பிரிவினையில் நடத்தச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
முஸ்லீம்களுக்கு அவர்கள் கேட்டப்படி, தனிநாடு கொடுக்கப் பட்டுள்ளது. அவர்கள் ஏன் இந்துக்களைத் தாக்கப் போகிறார்கள் ? ஏன் இப்படி இந்துக்கள் பயந்து சாகிறார்கள்? என யோசித்த காந்தி, தனது மீதி காலத்தைப் பாகிஸ்தானைச் செலவழிக்கப் போகிறேன் என்ற சிந்தனையில் பாட்னா வந்து சேர்ந்தார்.
அங்கு மாணவர்களுடன் உரையாடினார் காந்தி. தேசப் பிரிவினையில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான முஸ்லீம்கள் நடத்தும் வன்முறைகள் பற்றி காந்தி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தை ராட்டை சுற்றிக் கொண்டாடுங்கள் என்றும், கல்லூரிகளைச் சுத்தம் செய்யுங்கள் என்றும் கூறிய காந்தி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் அராஜகம் அதிகரித்துள்ளதைச் சர்வதேச அளவில் எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
லண்டனில் வசிக்கும் சீக்கியர்கள், ஒரு குருத்துவாரில் ஒன்று கூடி, பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுப்பது எப்படி? என்று ஆலோசனை செய்தனர். சீக்கியர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்றால், ஒட்டுமொத்த பஞ்சாபும் இந்தியாவுடன் சேரவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தைக் கோரிக்கையாகப் பிரிட்டன் பிரதமர் அட்லீயிடம் சமர்ப்பிக்க முடிவெடுத்தனர்.
இதற்கிடையே, ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து விட்டதால், அவரது கையாட்கள் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்து மாணவர்களை மிரட்டினார்கள். தங்களைத் தாக்க ஆயுதங்களுடன் முஸ்லீம் மாணவர்கள் இருப்பதை அறிந்த இந்து மாணவர்கள் 300 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.
இந்து மாணவர்கள் தப்பியதால், நிஜாமின் கையாட்களான ரஜாக்கர்கள், இந்துக்கள் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்துக்களின் வீடுகள்,கடைகள்,என இந்துக்களின் உடைமைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப் பட்டது. கண்ணில் படும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப் பட்டன. ஹைதராபாத்தில் முஸ்லீம்களால் தாங்கள் சந்தித்து வரும் கொடுமைகளைப் பட்டியலிட்டு, நேருவுக்கும், மவுண்ட்பேட்டனுக்கும் தந்தி அனுப்பினார்கள் அங்கிருக்கும் இந்துக்கள்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் விதர்பா என்னும் தனி மாநிலம் கேட்டு வந்தனர். இருந்தாலும் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரம் வேண்டும் என்பதில் பெரும்பாலான மராட்டியத் தலைவர்கள் உறுதியாக நின்றனர். ஏற்கெனவே பாகிஸ்தானுடன் ஜோத் பூரை சேர்க்க,பல வாக்குறுதிகளை ஜின்னா அள்ளிக் கொடுத்திருந்தார். ஆனால் அவையெல்லாம் பொய் புரட்டு என உணர்ந்த ஜோத்பூர் அரசர், இந்தியாவுடன் இணையச் சம்மதம் தெரிவித்தார்.