இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இதன் மதிப்பு 73 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாக, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில் செல்போன்களே முக்கிய இடம் வகிக்கின்றன. முதலாம் காலாண்டில் செல்போன்கள் மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்தபடியாக சூரியசக்தி சார்ந்த உபகரணங்கள், சார்ஜர் அடாப்டர்ஸ், மின்னணு உதிாி பாகங்கள் உள்ளிட்டவை அதிகம் ஏற்றுமதியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி அதிகபட்சமாக 4 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.