திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சந்தித்து, கடந்த 10 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி பணிகள் மேற்கொண்டால், பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அண்ணாமலை எடுத்துரைத்தார். இதுதொடர்பாக, மறுஆய்வு செய்து பதிலளிப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.