இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்துவிட்டதே 50 சதவீதம் வரி விதிப்புக்குக் காரணம் என வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடி எனவும் கூறியுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் உறுதியான மற்றும் சுதந்திரமான நிலைப்பாட்டை, டிரம்ப் தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் உடனான போர்நிறுத்தத்தில் தனக்குக் கிடைக்க இருந்த பெருமையை அனுமதிக்காததன் காரணமாக, இந்தியா மீது ட்ரட்பிற்கு கோபம் ஏற்பட்டுள்ளதாகவும், வரிவிதிப்பில் சீனாவைத் தண்டிக்காமல் இந்தியா குறிவைக்கப்பட்டதற்கு இதுவே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.